logo

தமிழ்நாடு - தேனி மாவட்டம் தேனி பொம்மையகவுண்டன்பட்டியில் சாலை பராமரிப்பு பணிகள் செய்யாவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு???பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கவும் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவிக்க முடிவு !!!

தமிழ்நாடு - தேனி மாவட்டம் தேனி பொம்மையகவுண்டன்பட்டியில் சாலை பராமரிப்பு பணிகள் செய்யாவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு???பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கவும்

கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவிக்க முடிவு.

தேனி அல்லிநகரம்
நகராட்சி
பொம்மையகவுண்டன்பட்டி
பாலன் நகர் மெயின் சாலை
வடக்குதெரு,
சாலை பிள்ளையார்கோவில் அருகில் செல்லும் சாலை ஆகிய மூன்று சாலைகளை

வேலை பார்ப்பதாக சொல்லி
தூசி பறக்காமல் இருந்த சாலையை தோண்டி அரையும் குறையுமாக விட்டு சென்று விட்டார்கள்.

இதனால் இப்பகுதியில்
வாகனங்கள் அதிக போக்குவரத்து இருக்கும் காரணத்தினால் சாலையில் உள்ள தூசிகள் கிளம்பி வீட்டின் உள்ளேயும், நடமாடும் மனிதர்களும் சுவாசிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளபட்டு உள்ளோம்.

இதனால் நோயாளிகள்மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள்
எனவே நகராட்சி நிர்வாகம் நேரில் பார்வையிட்டு சரி செய்து தர வேண்டுகிறோம்.

தவறும் பட்சத்தில் இப்பகுதி மக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து உள்ளார்கள் என்று தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்!!!!...................................................... ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF - மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புச் செயலாளர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் - அ.ந.வீரசிகாமணி.

188
5129 views